முடிவை அறிவித்தார் பிரதமர் மோடி.. கட்டவிழ்த்து விடப்படும் இந்திய இராணுவம் - இனி நடப்பதை பாகிஸ்தானாக இருந்தாலும் தடுக்க முடியாது..! - Seithipunal
Seithipunal


ஜம்மு & காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் இந்திய துணை ராணுவப்படையினரின் வாகன அணிவகுப்பு மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில்  41 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காஷ்மீரின் ஜம்மு நகரிலிருந்து 2500 மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றிக் கொண்டு 70 வாகனங்கள் ஸ்ரீநகருக்கு சென்று கொண்டிருந்த போது, புலவாமா மாவட்டம் அவந்திப்போரா  நகரின் லேத்போரா பகுதியில், அந்த வாகனங்கள் மீது 350 கிலோவுக்கும் கூடுதலான வெடிமருந்து ஏற்றப்பட்ட வாகனத்தை மோத வைத்து இந்தத் தாக்குதலை பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் தாக்கத்தை அங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீநகரிலும் உணர முடிந்ததாக தகவல்கள்  தெரிவிக்கின்றன. இவர்களில் 41 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்திருக்கின்றனர்.

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல் இதுதான் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் அமைதியை சீர்குலைக்கவும், குழப்பத்தை ஏற்படுத்தவும் முயன்றதற்காக பாகிஸ்தானுக்கு பல்வேறு தருணங்களில் இந்தியப் படைகள் பாடம் புகட்டியுள்ளன.

இந்த நிலையில், பிரதமர் தலைமையில் நடைபெற்ற அவசர கூட்டத்திற்கு பிறகு மோடி தனது கருத்தினை வெளியிட்டார்.

அதில் இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரத்தை வழங்கி இருக்கிறோம். இதன் மூலம் மிக பெரிய தவறினை செய்த பாகிஸ்தான் நாட்டிற்கு கடும் பதிலடி கொடுக்கப்படும். வீரர்களின் உயிர் தியாகம் வீணாகாது என்று தெரிவித்தார்.

இந்த முறை தாக்குதல் தீவிரவாதிகளுக்கு மட்டுமல்லாமல் அவர்களுக்கு உதவும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian military attack soon


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->