இங்கு செல்ல வேண்டாம் கவனமாக இருங்கள்.! மத்திய அரசு இந்தியர்களுக்கு எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா ஈரான் இடையே அணு ஆயுத தவிர்ப்பு விவகாரம், யூரேனியம் செறிவூட்டல், பொருளாதார தடைகள் போன்ற பல விவகாரங்கள் காரணமாக அமெரிக்கா ஈரான் இடையே பிரச்சினைகள் ஏராளம். இதனால் இரு நாடுகளிடையே அசாதாரண சூழல் நிலவி வருகிறது. 

இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 3ம் தேதி) அமெரிக்கா ராணுவம் நடத்திய வான்வழித்தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இத தாக்குதலானது தொடரும் என்றும் மேலும் ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா சவால் விடுத்தது. 

அதேபோல அமெரிக்காவின் செயல்களுக்கு பழி தீர்ப்போம் என ஈரானும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் 12க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், எந்தவித அத்தியாவசியத் தேவையின்றி இந்தியர்கள் ஈரானுக்கு செல்ல வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.  இந்திய விமானங்கள் ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

ஈராக்கில் உள்ள இந்தியர்களை எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஈரான் அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவுவதால் இந்தியர்கள் இந்தியர்களுக்கு எச்சரிக்கை, ஈராக்கில் உள்ள அமெரிக்க படைதளங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மத்திய அரசு அறிவுறுத்தல். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian government request to peoples


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->