இராணுவத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு உதவித்தொகை அதிகரிப்பு..!! இராணுவ மந்திரி அதிரடி.!! - Seithipunal
Seithipunal


உலகளாவிய இராணுவ அதிகாரிகள் தங்களின் தாய்நாட்டிற்க்காக உயிரை துறக்கவும் தயாராகி., தாய் நாட்டிற்கு சேவை செய்கிறோம் என்ற வீரத்துடன் இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். எதிரிநாட்டின் தாக்குதலில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு., தங்களின் உயிரை முன்னிறுத்தி நம்மை பாதுகாத்து வருகின்றனர். 

இந்த சமயத்தில்., எதிர்ப்பாராத விதமாக எதிரிகளின் தாக்குதலால் வீரமரணம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. நெஞ்சினில் துளைத்த குண்டை பார்த்து சிரித்து., இறக்கும் தருவாயில் கூட ஜெய் ஹிந்த் என்று கூறி வீரமரணம் அடைந்த வீரர்கள் பலர். இவர்களின் இறப்பிற்கு பின்னர் இவர்களின் குடும்பத்தின் நிலையை புரிந்து., உதவித்தொகையானது அரசால் வழங்கப்பட்டு வருகிறது.  

இந்திய இராணுவத்தில் பணியாற்றி வரும் இராணுவ வீரர்களுக்கு வீரமரணம் ஏற்படும் பட்சத்தில்., அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.2 இலட்சம் நிதிஉதவியானது அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிதியுதவியை தற்போது ரூ.8 இலட்சமாக உயர்த்தி., இராணுவ மந்திரி இராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். 

ind army,

இந்த நிதியானது இராணுவ போர்க்கள விபத்து நல நிதியத்தின் மூலமாக பெறட்டு நிதிஉதவி வழங்கபடுகிறது. கருணைத்தொகையாக பதவிக்கு ஏற்ப வழங்கப்பட்டு வந்த தொகையும் அதிகரிக்கப்பட்டு., பதிவுக்கு ஏற்ப ரூ.25 இலட்சம் முதல் ரூ.45 இலட்சம் வரை வழங்கப்படும். 

குழுக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.40 இலட்சம் முதல் 75 இலட்சம் வரையிலும், இறப்பு இணைப்புகாப்பீட்டு திட்டத்தின் கீழாக ரூ.60 ஆயிரம் மற்றும் படைவீரர் மனைவியர் நலச்சங்கம் சார்பாக ரூ.15 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாது வீரமரணம் அடைந்த படைவீரரின் குழந்தைக்கான கல்விச்செலவு., 70 விழுக்காடு அளவிற்கான இரயில்வே கட்டண தள்ளுபடி., மகள்களின் திருமண உதவியும் செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian army officers died in war welfare fund increased


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->