காணாமல் போன இந்திய இராணுவ வீரர்! பனியில் புதைந்த சோகம்! - Seithipunal
Seithipunal


இந்திய ராணுவ வீரரின் உடல் புதைந்த நிலையில் ஜம்மு - காஷ்மீர் எல்லையில் மீட்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

36 வயதான ராஜேந்திர சிங் நேகி இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக ஜம்மு காஷ்மீர் எல்லையில் பணி புரிந்து வந்தார். இவர் கடந்த ஜனவரி மாதம் பணியில் இருந்தபோது கடுமையான பனிப்பொழிவு காரணமாக குல்மார்க் எனும் இடத்தில காணாமல் போனார். 

இதனையடுத்து, ராணுவத்தினர் மற்றும் போலீஸாருடன் இணைந்து அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. ராஜேந்திர குமார் நேகியை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் அவர் வீர மரணம் அடைந்துவிட்டதாக கடந்த ஜூன் மாதம் இந்திய இராணுவம் அறிவித்தது. 

இந்நிலையில், காஷ்மீர் எல்லைப் பகுதியில் பனியில் புதைந்த நிலையில் ராஜேந்திர குமார் நேகியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரின் உடலை இந்திய இராணுவம் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துளளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian army man dead body found in kashmir


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->