இராணுவ வீரர்களின் தகவலை திருடும் உளவு அமைப்புகள்.. அடுத்த அதிரடி நடவடிக்கை.!! - Seithipunal
Seithipunal


இந்திய இராணுவ வீரர்களின் அலைபேசியில் இருக்கும் செயலிகள் மூலமாக பல இராணுவ இரகசியங்கள் திருடப்படுவதாக சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாக முகநூல், டிக் டாக், ட்ரு கலர், இன்ஸ்டாகிராம், வி சாட், ஹெலோ சாட், ஷார் சாட், சென்டர், யூ.சி பிரவுசர், யூ.சி. மினி, சூம், கேம் ஸ்கேனர், பியூட்டி ப்ளஸ், பப்ஜி, கிளாஸ் ஆப் கிங்ஸ், மொபைல் லிஜெண்ட்ஸ், கிளீன் பேக்டர், 360 செக்கூரிட்டி, ஸ்னாப் சாட், டெய்லி ஹண்ட் உள்ளிட்ட 89 செயலிகளை உடனடியாக நீக்க இராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதுபோன்ற செயலிகள் இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்க வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பாக்கிஸ்தான் மற்றும் சீன நாடுகளின் உளவு அமைப்புகளால் இந்திய இராணுவத்தை சார்ந்தவர்கள் சமூக வலைத்தளத்தில் அதிகளவு கனகண்காணித்து வருவதாகவும், இதனால் மேற்கூறியுள்ள நடவடிக்கையை மேற்கொண்டு செயலியை நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

முக்கிய தரவுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் வெளியாவதை தடுக்கும் நோக்கில் வரும் 15 ஆம் தேதி முதல் இம்முறை அமலுக்கு வருவதாகவும், இந்த ஒழுங்குமுறையை பின்பற்றாத நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், லடாக் எல்லையில் இந்தியா - சீனாவிற்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு பின்னர் 59 சீன செயலிகள் தடை செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில், பாதுகாப்பு கருதி இராணுவ வீரர்கள் மேலும் பல செயலிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Army banned 89 Apps


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->