இந்திய - வங்காளதேச எல்லைப்பாதுகாப்பு படை தலைவர்கள் முக்கிய ஆலோசனை..! நடந்தது என்ன?..!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொல்கத்தாவில் இருக்கும் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஷைரொஷர் கிராமத்தை சார்ந்த சுமார் 3 மீனவர்கள்., இந்தியா - வங்காளதேச எல்லையில் அமைந்துள்ள பத்மா ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சமயத்தில்., அங்கு வந்த வங்காளதேச படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இவர்களில் 2 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில்., இந்திய பாதுகாப்பு படையினருக்கும் இந்த தகவலை தெரிவித்து எச்சரித்து அனுப்பினர். உடனடியாக இந்திய பாதுகாப்பு படையினர் இந்த கோரிக்கையை ஏற்று 6 இந்திய பாதுகாப்பு படையினர் படகு ஒன்றில் வங்காளதேச வீரர்களிடம் பேச்சுவார்த்தையை நடத்த சென்று கொண்டிருந்தனர். 

அந்த சமயத்தில்., பத்மா ஆற்றின் நடுவே இந்திய வீரர்கள் சென்ற படகை சுற்றிவளைத்த வங்க தேச பாதுகாப்பு படையினர் அடாவடித்தனத்தில் ஈடுபட்டு., இந்திய பாதுகாப்பு படையினர் படகின் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். 

இந்த துப்பாக்கி சூட்டில் இந்திய பாதுகாப்பு படையினர் ஒரு வீரர் படுகாயம் அடைந்தார். மற்றொரு வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த வீரரை அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து., இரு நாட்டு பாதுகாப்பு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது வங்காளதேச உள்துறை மந்திரியான அசாதுஸ்மான் கான் கமல் செய்தியாளர்களை சந்தித்தார். 

அந்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது., இந்தியா மற்றும் வங்காள தேச எல்லை பாதுகாப்பு படை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது நடந்த சம்பவம் துரதிஷ்டவசமாக நடந்து இருக்கலாம். இது குறித்து பேச்சுவார்த்தை மூலமாக இந்தப் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india west bengal border security force speech about indian army man died


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->