சத்தமே இல்லாமல் வேலையை காட்டிய சைனா.. களமிறங்கும் இந்தியாவின் அல்டிமேட் ஆயுதம்.!! - Seithipunal
Seithipunal


இந்திய - சீன எல்லையில் உள்ள லடாக் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த மாதம் 15 ஆம் தேதி அத்துமீறிய சீன இராணுவ அதிகாரிகளுக்கும், இந்திய இராணுவத்தினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் மட்டும் தெரியவருகிறது. 

எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்தையானது நடைபெற்ற நிலையில், இருதரப்பிலும் லடாக் எல்லையில் இருக்கும் படைகளை வாபஸ் பெறுவதாக பேசி முடிக்கப்பட்டது. இந்த நிலையில், சீனா கல்வான் பகுதியில் தனது சீன படைகளை குவித்து வரும் காட்சிகள் செயற்கை கொள் மூலமாக அம்பலமாகியுள்ளது. 

இந்தியா - சீனா இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ள தருணத்தில், இருநாடுகளும் படைகளை குவித்து வருகிறது. மேலும், இந்தியா தனது டி-90 ரக பீஷ்மா பீரங்கிகளை அதிகளவு எல்லைக்கு அனுப்பி வருகிறது. இந்த ரக பீரங்கிகள் துல்லியமான தாக்குதலுக்கும், நிமிடத்திற்கு 60 குண்டுகளை பொழியும் ஆற்றலையும் கொண்டுள்ளது.

மேலும், ரசாயன மற்றும் உயிரி ஆயுதத்தையும் கையாளும் திறனை கொண்ட இப்பீரங்கி, ரஷிய நாட்டில் தயார் செய்யப்பட்டது ஆகும். இதன் எடை 40 டன் ஆகும். ஆயிரம் குதிரைகளின் விசை ஆற்றலை கொண்டதாகும். இதன் மூலமாக 6 கிமீ தூரம் வரை இருக்கும் இலக்கை எளிதில் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. எல்லையில் இந்தியா பீரங்கியை தற்போது அதிகளவு குவிக்க துவங்கியது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India sent T 90 Model Panzer Tank at Ladakh Border


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->