எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்.! தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்.! - Seithipunal
Seithipunal


இந்திய அரசு, காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கிய பிறகு கடந்த ஒரு மாத காலமாக எல்லையில் பதற்றம் அதிகமாக இருக்கிறது.

இதை தொடர்ந்து நேற்று மாலை பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதியில் பாலகோட் மற்றும் பிஹ்ருட் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டிற்கு பயந்து பள்ளிகளில் தஞ்சமடைந்திருந்த குழந்தைகளை இந்திய ராணுவத்தினர் பத்திரமாக மீட்டெடுத்தார்கள்.

உயிர் பயத்தில் ஓடி வந்த குழந்தைகள் இருவரை இந்திய ராணுவ வீரர் ஒருவர் தனது தோள்களில் சுமந்தவாறு பத்திரமான இடத்திற்கு கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில், நேற்று இரவு 10.30 மணிக்கு மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலகோட் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.

பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ வீரர்கள் சிலர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india pakistan attack on border


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->