இந்தியா நேபாளம் இடையே புதிய ரயில் சேவை தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


இந்தியா நேபாளம் இடையேயான ரயில் போக்குவரத்தை இந்திய பிரதமர் மற்றும் நேபாள பிரதமர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் ஷேர் பகதூர், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து,இரு நாட்டு உறவுகள், வளர்ச்சி, வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு  பற்றி இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, ரெயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெசுத்திட்டனர்.

பின்னர், இரு நாடுகளுக்கிடையிலான இணைப்பை அதிகரிக்கும் வகையில், பீகாரின் ஜெய்நகரை நேபாளத்தின் குர்தா பகுதியுடன் இணைக்கும் முதல் அகல ரெயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா ஆகியோர் காணொளி வாயிலாக திறந்து வைத்து, அந்த வழித்தடத்தில் ரெயில் சேவையை தொடங்கி வைத்தனர். 

ஜெய்நகர்-குர்தா வழித்தடமானது 35 கிமீ நீளம் கொண்டது. இதில் 3 கிமீ பீகாரிலும் மற்ற பகுதி நேபாளத்திலும் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Nepal train service


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->