மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுமதி... அனுமதி அளித்த மத்திய அரசு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் நோக்கில் மலேரியாவிற்கு பயன்படுத்தும் hydroxychloroquine மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது.

ஆனால் அமெரிக்கா கரோனா வைரஸ் பாதித்த அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு hydroxychloroquine மருந்து தான் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் அமெரிக்காவுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது இந்தியா.

இந்த hydroxychloroquine மருந்தைத் தயாரிப்பதில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. எனவே அமெரிக்காவுக்கு இந்தியா உதவ வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். மேலும், இவர் நேற்று பேசியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்தியாவை அதிகம் சார்ந்துள்ள மற்றும் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. இதில், குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மனிதாபிமான அடிப்படையிலேயே இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனை மேற்கோள்காட்டி அரசியல் செய்ய வேண்டாம் என்றும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

அமெரிக்கா ஏற்கனவே இந்த விவகாரத்தில் இந்தியா ஒத்துழைக்கவில்லை என்றால் பதிலடி தரப்படும் என்று அமெரிக்கா கூறியிருந்த நிலையில், இந்தியா மருந்து ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India gives permission for medicine export


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->