சீனாவுக்கு ஆப்பு.. நேரடியாகவும், மறைமுகமாகவும் வச்சி செய்யும் இந்தியா.! - Seithipunal
Seithipunal


இந்தியாவும் - சீனாவும் நட்பு நாடுகளாக இருந்த சமயத்தில், வர்த்தகம் தொடர்பான விவகாரங்களில் நெருங்கி இருந்ததால் கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 92.68 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.6.76 இலட்சம் கோடி) அளவில் வர்த்தகம் செய்திருந்தன. 

இதன்பின்னர் எழுந்த எல்லை பிரச்சனை, லடாக் எல்லை மோதல், கள்வான் பள்ளத்தாக்கு பதற்றம் போன்றவை காரணமாக இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட துவங்கிய நிலையில், சீன செயலிகள் மற்றும் பிற பொருட்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தடை விதிக்கப்பட்டது. 

இந்திய மக்களும் சீனாவின் உற்பத்தி பொருட்களை நிராகரித்து, இந்திய பொருட்களை வாங்க துவங்கினர். இந்த வருடத்தில் இந்திவிற்கான சீன ஏற்றுமதி 13 விழுக்காடு குறைந்துள்ளது. கடந்த 11 மாதங்களில் இந்தியாவில் இருந்து சீன ஏற்றுமதி பொருட்கள் வர்த்தகம் 16 விழுக்காடு அதிகரித்து, 19 பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 

எல்லை பதற்றம் காரணமாக அவ்வப்போது வர்த்தகம் தடைபட்டாலும், தற்போது வரை இயல்பான அளவு வர்த்தகம் நடந்துள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India China Import Export 8 December 2020


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->