இலங்கைக்கு 65 ஆயிரம் டன் யூரியா வழங்க இந்தியா ஒப்புதல்.! - Seithipunal
Seithipunal


இலங்கைக்கு 65 ஆயிரம் டன் யூரியா வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு பொருள் மற்றும் எரிபொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கைக்கு உடனடியாக 65 ஆயிரம் டன் யூரியா வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

டெல்லியில் உள்ள இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட, இந்திய வேளாண் துறை செயலாளர் செயலாளர் ராஜேஷ் குமார் சதுர்வேதியை சந்தித்து நடப்பு பருவத்திற்கான தேவையான அளவு யூரியா வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து இந்தியாவில் யூரியா ஏற்றுமதிக்கு தடை இருந்த போதிலும் இலங்கையின் வேண்டுகோளுக்கிணங்க யூரியா தருவதை உறுதி செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India assures to supply urea to srilanka


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->