மொத்தம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்., வருமான வரித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் - டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை இந்தியாவில் வருமான வரி செலுத்திய 1.18 கோடி பேருக்கு, ரூபாய் 1.50 லட்சம் கோடி ரூபாயை திருப்பி அளித்துள்ளதாக வருமானவரித்துறை இன்று அறிவித்துள்ளது.

1.50 லட்சம் கோடி ரூபாயை திருப்பி அளித்தது குறித்து இன்று வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,

"இந்தியா முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரையில், வருமான வரி செலுத்துவதற்கான திருப்பி வழங்கல் தொகை ரூபாய் ஒரு லட்சத்தி 50 ஆயிரத்து 863 கோடி ரூபாய் தொகையை, 1.18 கோடி கணக்கு தாரர்களுக்கு மத்திய நேரடி வரி வாரியம் திருப்பி வழங்கியுள்ளது.

1,16,07,299 தனிநபர் கணக்குகளுக்கு 47,608 கோடி ரூபாயும், 2,01,796 கார்ப்ரேட் நிறுவன கணக்குகளுக்கு 1,03,255 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது" என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

income tax department


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->