இளம்பெண்ணை நடுரோட்டில் கயிற்றால் கட்டி தாக்கும் திமுக கூட்டணிக்கட்சி.. பதைபதைப்பு வீடியோ காட்சிகள்..!! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் தலைமையிலான குழு பெண்ணொருவரை கயிற்றைக் கட்டி இழுத்துச் செல்லும் வீடியோவானது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெற்கு தினஜ்புர் மாவட்டத்தில் இருக்கும் கங்கராம்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட படா கிராமத்தில் இது நடந்துள்ளது.  

அங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் ஸ்மிரிதி கோனே தாஸ் என்ற பெண்ணை அடித்து அவரது முழங்காலில் கயிறு கட்டி இழுத்துச் செல்கின்றனர். இதுமட்டுமல்லாது இவரின் மூத்த சகோதரி சோமா தாசையும் கீழே தள்ளி இழுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அங்குள்ள கிராமத்தில் சாலையை அகலப்படுத்த பணிக்கு நிலம் கொடுப்பது தொடர்பான தகராறில் பஞ்சாயத்து தலைவர் இரண்டு பெண்களையும் அடித்து துன்புறுத்த்தியது தெரியவந்துள்ளது. 

மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினார். இதனையடுத்து பஞ்சாயத்து துணைர்த்தலைவரான அமீர் சர்கார் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த வீடியோ பெரும் வைரலானதால் கட்சியில் இருந்து நீக்கம் செய்து அறிவிக்கப்பட்டனர். இருப்பினும் தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in west Bengal girl attack


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->