சிறுமியை எரித்து கொலை செய்த வழக்கில்., 16 பேருக்கு உச்சக்கட்ட தண்டனை விதித்த நீதிமன்றம்..!! - Seithipunal
Seithipunal


வங்காள தேசத்தின் தலைநகரான டாக்காவில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பெனி பகுதியைச் சார்ந்தவர் நுஸ்ரத் ஜஹான் ரபி (வயது 19). இவர் அங்குள்ள முஸ்லிம் பள்ளியில் கல்வி பயின்று வந்த நிலையில்., இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். 

இதனையடுத்து பொறுத்து பார்த்த சிறுமி கடந்த மார்ச் 27 ஆம் தேதி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில்., தலைமையாசிரியர் கைது செய்த நிலையில்., விசாரணைக்கு பின்னர் தலைமையாசிரியர் விடுதலை செய்யப்பட்டார். 

இந்த தருணத்தில்., உள்ளூர் அரசியல்வாதி மற்றும் சில மாணவர்களுடன் சிறுமிக்கு எதிராக போராட்டம் நடத்தி நிலையில்., கடந்த ஏப்ரல் மாதத்தின் ஆறாம் தேதி தேர்வு எழுத மாணவி பள்ளிக்கு வந்த நிலையில்., இவருடன் பயின்று வந்த மாணவி ஒருவர் அவரை பள்ளிகள் மேல் தளத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

sexual harassment, sexual abuse, sexual torture, rapped,

இந்த சமயத்தில்., அங்கிருந்த தலைமை ஆசிரியர் உட்பட நால்வர் சிறுமியை பாலியல் வழக்கு தொடர்பான விசாரணை வழக்கை வாபஸ் பெற கூறி மிரட்டியுள்ளனர்., இந்த புகார் மனுவை வாபஸ் பெற மறுத்த சிறுமியின் மீது., மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். 

இந்த நிலையில்., சிறுமி பரிதாபமாக உயிருக்கு போராடிய நிலையில்., தகவல் அறிந்த காவல்துறையினர் மாணவியை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்து., மரணத்திற்கு முன்னர் மரண வாக்குமூலம் பதிவு செய்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இது மட்டுமல்லாது காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., இந்த சம்பவத்தை தற்கொலையாக காட்ட வேண்டும் என்று கொலையாளிகளில் முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டினார். இதனையடுத்து இது தொடர்பாக அங்குள்ள பகுதிகளில் பல சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் போராடிய நிலையில்., குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தனர். 

இந்த விஷயம் தொடர்பான தகவல் பிரதமரின் கவனத்திற்கு செல்லவே., இதுதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., இந்த வழக்கில் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில்., இவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in west Bengal 16 culprit sign death warrant by judge


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->