அத்தியாவசிய தேவையான சிலிண்டரை சோதிக்கையில் காவல்துறையினருக்கு பேரதிர்ச்சி.. பாட்டில் பாட்டிலாக சரக்கு..!! - Seithipunal
Seithipunal


உலகளவில் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸானது இந்தியாவிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்திற்கு இந்தியாவில் 873 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும், நேற்று ஒரேநாளில் 139 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நேற்று வரை கரோனா அறிகுறியுடன் இருந்த நபர்களின் எண்ணிக்கை 38 ஆக இருந்தது. இவர்களில் 2 பேர் சிகிச்சை முடிந்து இல்லங்களுக்கு திரும்பிய நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இன்று மேலும் இரண்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க அரசு பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வர அனுமதி செய்யப்பட்டுள்ளனர். 

மக்கள் அதிகளவில் அனாவசியமாக சுற்றி வருவதால் காவல் துறையினர் பல அதிரடி நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வாகனங்களுக்கு அரசு அனுமதி செய்துள்ளது. 

அத்தியாவசியம் என்ற பெயரில் சில விஷமிகளால் கடத்தல் மற்றும் பதுக்கி வைக்கப்படும் பொருட்களில் மதுபானம் இருந்து வருகிறது. சிலிண்டர் என்ற பெயரில் சிலிண்டருக்குள் மதுபானம் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in video trend about cylinder liquor alcohol


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->