உறங்கிக்கொண்டு இருந்த தம்பதியின் மீது இடிந்து விழுந்த சுவர்..! துடிதுடிக்க தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்..!! - Seithipunal
Seithipunal


நாம் வாழும் உலகில் மக்கள் தங்களின் உயிரை பல முறையில் பரிதாபமாக இழந்து வருகின்றனர். வாகனங்களில் ஏற்படும் விபத்துகளில் சிக்கி பலர் தங்களின் உயிர் மற்றும் உடமைகளை இழந்து., குடும்ப உறுப்பினர்களையும் இழந்து துடிதுடித்து வருகின்றனர். 

உலகம் முழுவதும் நொடிப்பொழுதில் பல்வேறு விபத்துகள் நிகழ்வதாக ஆய்வறிக்கைகள் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்., வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த தம்பதி., வீட்டின் சுவர் இடிந்து இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

accident, road accident, சாலை விபத்து, விபத்து,

இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரதப்பிக்ராக் மாவட்டத்தில் வசித்து வரும் நபரின் பெயர் ஷிவ் பகதூர் சரோஜ் (வயது 26). இவரது மனைவியின் பெயர் கன்யா தேவி (வயது 24). இவர்கள் இருவரும் நேற்றிரவின் போது வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்தனர். 

நள்ளிரவு நேரம் என்பதால் இருவரும் அயர்ந்து உறங்கிக்கொண்டு இருந்த நிலையில்., வீட்டின் சுவரானது திடீரென இடிந்து விழுந்தது. இதனையடுத்து இவர்கள் இருவரும் இடிபாடுகளில் சிக்கி அலறவே., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து பார்த்தனர். 

died, suicide attempt, killed, murder, கொலை, தற்கொலை,

இந்த நேரத்தில்., வீட்டின் சுவர் இடிந்து இடிபாடுகளில் இருவரும் சிக்கியுள்ளதை அறிந்த உறவினர்கள்., காவல் துறையினருக்கும் - அவசர ஊர்தியினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரையும் மீட்டு சோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மருத்துவமனையில் இவர்கள் இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள்., இருவரும் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட உறவினர்கள் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in uttarpredesh husband wife died due to home collapse


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->