கொட்டி தீர்த்த கனமழை.! 25 பேர் பரிதாப பலி.... அடுத்தகட்டமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 16 மாவட்டங்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் வடகிழக்கு பருவமழையானது பெரும்பான்மை இந்திய மாநிலங்களுக்கு நல்ல மழையை தந்து., மக்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தும் பருவமழையாகும். இந்த நிலையில்., பருவநிலை மாற்றம் மற்றும் பிற காரணங்களுக்காக பருவ மழையானது பேய் மழையாக பெய்து., காணும் இடமெல்லாம் வெள்ளகாட்டால் நிரப்பி., மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. 

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் கேரள மாநிலம்., அசாம் போன்ற மாநிலங்கள் பருவமழை அதிகமாக பெய்ததால் கடுமையான அளவு சேதத்தை சந்தித்து வந்த நிலையில்., நேற்று இரவு புனேயில் ஒரே நாள் இரவில் பெய்த மழையால் புனே நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. மேலும்., 17 பேர் மழை வெள்ளத்தால் பரிதாபமாக பலியாகினர். 

இந்த நிலையில்., இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வந்தது. உத்திரபிரதேசம் மாநிலத்தின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் அனைத்தும் கடுமையான மழையால் பெரும் பாதிப்பிற்கு உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையானது கடுமையான அளவு பாதிக்கப்பட்டு., மக்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். 

uttar pradesh rain, uttar pradesh flood, உத்திரபிரதேசம் மழை, உத்திரபிரதேசம் வெள்ளம்,

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி., அமேதி., லக்னோ மற்றும் உன்னாவ் நகரங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு உயிரிழப்பும் நிகழ்ந்துள்ளது. இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது., கடந்த 24 மணிநேரத்தில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தாகவும்., மரங்களும் சாய்ந்ததை அடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும்., வெள்ள நீரினை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்., கடந்த 24 மணிநேரத்தில் ரேபரேலியில் அதிகளவு மழை பெய்துள்ளதாகவும்., இதற்கு அடுத்தபடியக லக்னோ உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது அங்குள்ள 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in uttarpredesh heavy rain 25 peoples died and 16 district have rain


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->