10 விவசாயிகள் சுட்டுக்கொலை..! அதிர்ச்சியூட்டும் வகையில் வெளியான காணொளி காட்சிகள்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் உத்திர்ப்பிரேதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ மாவட்டத்தில் நில உடைமை தொடர்பாக ஏற்பட்ட மோதல்களில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 28 பேர் காயமடைந்த சில நாட்களுக்குப் பிறகு., உத்தரபிரதேசத்தின் சோன்பத்ராவில் நிலைமை பதட்டமாக உள்ளது. இந்த பிரச்சனை நடைபெற்றதால் இருந்து அங்குள்ள பிரதான குற்றவாளிகள் - கிராமத் தலைவர் யாக்யா தத் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உட்பட குறைந்தது 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று வரை, சம்பவ நாளில் என்ன நடந்தது என்பதற்கான சரியான விளக்கம் தெளிவாக இல்லை.

இது தொடர்பான பரபரப்பு வீடியோ வெளியான நிலையில்., முதல் வீடியோ பதிவில்., கொலைகள் நடந்த தூரத்தில் பல டிராக்டர்களைக் காணலாம். கிராமத் தலைவரால் அழைக்கப்பட்ட உதவியாளர்கள் விவசாயிகளைத் தாக்கும் காட்சிகளும்., இரண்டாவது வீடியோவில்., எதிர்ப்பு தெரிவித்து ஆயுதத்தை கையில் வைத்திருந்த விவசாயிகளை சுற்றி இருந்த நபர்கள்., கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதையும் காணலாம்.

Tamil online news Today News in Tamil 

விஷயத்தை அறிந்த காவல்துறையினர் 30 நிமிடங்கள் கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது, இந்த தாக்குதல் நடத்தியவர்களுக்கும் - அதிகாரிகளுக்கும் இடையிலான சில நல்லுறவு இருப்பதாகவும், ஆதிக்கம் மற்றும் பயத்தின் காரணமாக விவசாயிகளால் இது தொடர்பான பிரச்சனையை முதலில் வெளியில் கூற மறுத்து தற்போது வெளிவந்துள்ளது. மேலும்., அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட மறுத்துவிட்டனர்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மாவட்ட அதிகாரிகளுடன் 24 மணி நேர இடைவெளி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதால் இந்த விவகாரத்தில் மாநிலத்தின் அரசியல்களம் சூடுபிடிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சட்டவிரோதம் இருப்பதாகக் கூறப்படும் பாஜகவை பிரியங்கா குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த கொலைகளுக்கு காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியை சார்ந்தவர்கள் தான் காரணமாக இருக்கலாம் என்று அம்மாநில முதல்வர் சந்தேகம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

yogi aadidyanath,

முதல்வர் யோகி ஆதித்யநாத் சோன்பத்ரா துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களைச் சந்தித்து., இந்த சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் தருவதாக கூறியிருந்த நிலையில்., ரூ.18.5 லட்சமாக உயர்த்தினர். 

Tamil online news Today News in Tamil 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in uttarpredesh former's killed by shooting


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->