நோயாளியிடம் கிட்னியை திருடிய அரசு மருத்துவர்... வெளியான பகீர் தகவல்..!!  - Seithipunal
Seithipunal


உடல் உறுப்புகள் திருட்டு என்பது உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. என்னதான் பல முன்னேற்றங்களை நாம் கண்டிருந்தாலும் இன்னும் அறியாமையில் இருக்கும் பல நபர்களை மருத்துவத் துறையில் இருக்கும் நபர்கள் ஏமாற்றி வருகின்றனர். 

இவ்வாறான ஏமாற்றங்கள் சில நேரத்தில் உடலுறுப்பு திருட்டு போன்று நடந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள பிரயக்ராஜ் மாவட்டம் ஷாஜகான் பகுதியை சார்ந்த சிறுவனுக்கு சிறுநீரகத்தில் கற்கள் பாதிப்பானது இருந்துள்ளது. 

இதனால் அவதியடைத்து வந்த சிறுவனை., அவரது தந்தை அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில்., சிறுவனிற்கு அரசு மருத்துவர் பிரேம் மோகன் மிஸ்ரா என்பவர் சிகிச்சையளித்து வந்துள்ளார். 

hospital, hospital images,

மேலும்., கடந்த 1 மாத காலமாக சிகிச்சையளித்து சிறுநீரக கற்கள் பிரச்சனை சிறிது கூட குறையாமல்., உடல்நலம் இன்னும் மோசமடைந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார். 

இந்த நேரத்தில் சிறுவனை சோதனை செய்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள்., சிறுவனின் ஒரு சிறுநீரகம் திருடப்பட்டு இருப்பதை உறுதி செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இது குறித்து பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து., சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in uttarpredesh child kidney stolen by govt doctor


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->