இந்தியாவை மட்டுமல்லாது உலகையே உலுக்கிய பெரும் விபத்து., வழக்கு.! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பி.ஆர்.டி மருத்துவக்கல்லூரி மருத்துவனையில்., கடந்த 2017 ஆம் வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில்., ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக சுமார் 60 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்து இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை பதிவு செய்ததிருந்தது. 

மேலும்., இது தொடர்பான விசாரணையில்., மருத்துவ அலட்சியம் மற்றும் ஊழல்., கடமை செய்ய தவறிய குற்றம் தொடர்பான விசாரணையில்., இரண்டு வருடமாக நடைபெற்று வந்த நிலையில்., குழந்தைகள் மருத்துவர் கபில் கான் விசாரணையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்து விசாரணைக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்., பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். 

baby, baby died,

பின்னர் சுமார் 9 மாதங்கள் சிறையில் இருந்த நிலையில்., பிணையில் வெளிவந்த கபில் கான்., அம்மாநில அரசின் மீது குற்றம் சாட்டினார். இந்த விஷயம் தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும்., சிலிண்டருக்கு உரிய நேரத்தில் பணம் வழங்காத நபர்களே குற்றவாளிகள் என்றும் கூறினார்.

தகுந்த குற்றவாளிகளின் மீது விசாரணை நடத்தாமல்., என் மீது நடத்தி எந்த விதமான பயனும் இல்லை.. குழந்தையை இழந்து தவித்த பெற்றோர்கள் அனைவரும் நீதிக்காக காத்திருக்கும் நிலையில்., அவர்களுக்கு உரிய இழப்பீடை அரசு வழங்க வேண்டும். இதுமட்டுமல்லாது குழந்தைகளை இழந்த பெற்றோரிடம் அரசு மன்னிப்பும் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in uttarpredesh 60 baby died case doctor released by court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->