மூன்று மாதத்தில் ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை.! அரசு அறிக்கையில் வெளியான அதிர்ச்சி காரணம்..!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் முன்னொரு காலத்தில் பழக்கத்தில் இருந்த பெண் குழந்தைகளை சிசுவிலேயே கொலை செய்தலை தடுப்பதற்கு அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வு திட்டத்தை கையெடுத்து செயல்படுத்தி வருகிறது. அவ்வாறு நாம் எந்த விதமான திட்டத்தை செயல்படுத்தி வந்தாலும்., திட்டங்களை தொடர்ந்து அமல்படுத்தி வந்தாலும் பெண் சிசு கொலைகள் என்பது குறைக்க முடியாத ஒன்றாகிவிட்டது. 

இந்த நிலையில்., உத்திரகாண்ட் மாநிலத்தின் அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்., பெண் சிசு கொலைகளானது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உத்திரகான்ட் மாநிலத்தில் உள்ள சுமார் 132 கிராமத்தில்., கடந்த மூன்று மாதத்தில் ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை என்று ஆய்வு அறிக்கைகள் தெரியவருகிறது. 

pregnancy, pregnant, pregnant lady,

மேலும்., அங்குள்ள 132 கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களில் 216 குழந்தைகள் பிறந்துள்ள நிலையில்., 216 குழந்தைகளில் ஒரு குழந்தை கூட பெண் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும்., பெண் குழந்தைகள் கருவிலேயே சிசுக்கொலை செய்பட்டதும் தெரியவந்துள்ளது. பெண் குழந்தைகள் என்று கருவில் குழந்தை இருக்கும் போதே இதனை அறிந்து கருக்கொலைகள் செய்கின்றனர். 

குழந்தைகள் பெண்ணாக பிறந்திருக்கும் பட்சத்தில் பல விதமான புதிய திட்டங்கள்., சலுகைகள் போன்று பல நல்ல சலுகையை அரசு அளித்து வரும் நிலையில்., கருக்கொலைகள் காரணமாக பெண் குழந்தைகள் பிறக்காமல் இருந்துள்ள செய்தியானது பெறும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.  

Tamil online news Today News in Tamil 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in utarkhand no girl baby born last three month govt report shock to abortion


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->