13 வயது சிறுமியை நாடக காதலால் ஏமாற்றி சீரழித்த காம கொடூரன்.! பரிசோதனையில் காத்திருந்த பேரதிர்ச்சி.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் அவர்களுக்கு தெரிந்த நபர்களாலேயே நடைபெற்று வருகிறது. நாடக காதல் என்ற வலையில் விழும் சிறுமிகள்., அவர்களின் வாழ்க்கையை பரிதாபமாக உயிரிழப்பது பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது 28 வயதுடைய மனைவியுடன் தமிழக மாநிலத்தில் உள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் காங்கேயம் கவுண்டன் புதூர் பகுதியில் தங்கி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் அங்குள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 

இந்த சமயத்தில்., இந்த தொழிலாளியின் மனைவிக்கு குழந்தை பிறந்த காரணத்தால்., குழந்தையை கவனித்துக் கொள்ள அப்பெண்ணின் 13 வயதுடைய தங்கை பீகாரில் இருந்து திருப்பூருக்கு வந்துள்ளார். அந்த சமயத்தில்., திருப்பூருக்கு வந்து விழுந்த சிறுமி தனது அக்காவுடன் தங்கி குழந்தைகளை கவனித்து வந்த நிலையில்., அவரின் வீடு அருகே இருந்த அஜித் வர்சால் என்ற 26 வயதுடைய இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே காதலாக மாறவே இருவரும் காதலித்து வந்த நிலையில்., தான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி சிறுமியை மயக்கி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனையடுத்து ஊருக்கு சென்று வருவதாக கூறிய இளைஞன் ஊருக்கு சென்ற நிலையில்., மீண்டும் திருப்பூருக்கு திரும்பவில்லை. 

இந்த நிலையில்., சிறுமியின் வயிறு நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே இருக்க., இந்த மாற்றத்தை கவனித்த பெண்ணின் அக்கா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்ய கூறியுள்ளார். இதனையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்து., இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளார். 

அந்த விசாரணையில்., அதே பகுதியில் இருந்த வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமானார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இதுகுறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அந்த சிறுமிக்கு நேற்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thirupur girl rapped by her lover by drama love


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->