எட்டு வருடத்திற்கு முன்னதாக காணாமல் போன மகனை முகநூலின் மூலமாக மீட்டு தந்த காவல் துறையினர்.!! ஆனந்த கண்ணீரில் நன்றி கூறிய பெற்றோர்கள்.!!  - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2011 ம் வருடத்தில் அங்கு வசித்து வந்த தினேஷ் என்ற சிறுவன் காணாமல் போயுள்ளார். இவரை அங்குள்ள இடங்களில் எல்லாம் தேடி அலைந்து., மகனை காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். 

இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தும் பலனளிக்காமல்., சுமார் எட்டு வருடங்கள் கடந்தும் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருந்துள்ளது. 

இதனையடுத்து இவரை எப்படியாவது தேடி கண்டறிந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்., முகநூலை உபயோகம் செய்ய முடிவு செய்துள்ளனர். முகநூலின் மூலமாக பல நன்மைகள் இருப்பதை அறிவோம்.

நாம் கூட செய்திகளில் படித்திருப்போம்., பகிர்ந்திருப்போம்.. இந்த நபரை காணவில்லை.. தயவு செய்து உதவுங்கள்.. பகிருங்கள் என்று.. அதன் படி., இவரது புகைப்படம் மற்றும் பிற விபரங்களை சேகரித்து., சைபர் கிரைம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சைபர் கிரைம் கவலை துறையினர் தினேஷ் என்ற பெயரில் உள்ள பதிவுகளை தேடல் செய்யவே., அவரின் முகநூல் கணக்கானது கிடைத்துள்ளது. அந்த முகநூலில் இருந்த எண்ணை தொடர்பு  கொண்ட காவல் துறையினர் அவரின் இருப்பிடத்தை அறிந்தனர். 

தற்போது அவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ரித்சார் மாவட்டத்தில் உள்ள ரனகலா கிராமத்தில் வசித்து வருவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பஞ்சாபிற்கு சென்ற காவல் துறையினர் அவரை மீட்டு அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thelungana missing boy discovers by Facebook with the help of police


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->