என்கவுண்டர் நடத்திய காவல் அதிகாரிக்கு ரொக்கப்பரிசு.! குஜராத் தொழிலதிபர் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த வழக்கில் கைதான 4 பேர், அந்த பெண்ணை ஒரு மணி நேரத்திற்குள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிட்டதாக வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தரப்பு தெரிவித்திருந்தது.

சாம்சாபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் நாராயண்பேட்டை சேர்ந்த லாரி ஓட்டுநர்கள், க்ளினர்களான முகமது ஆரிப், ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன், சென்னகேசவலு ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வந்தார்கள். இதை தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையில், பெண் மருத்துவரின் இருசக்கர வாகனத்தை திட்டமிட்ட சதியால் பஞ்சராக்கி, பின்னர் அவர்களே சரி செய்வது போல நடித்து, புதன்கிழமை இரவு 1 மணி நேரத்துக்குள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தோம் என்று 4 பேரும் வாக்குமூலம் அளித்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

telungana doctor rapped and killed,

மேலும், நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பெண் கத்துவது வெளியில் கேட்காமல் இருக்க வாயில் மதுவை ஊற்றி உள்ளதாகவும், அதன்பின், பலாத்காரம் செய்து மயக்கமடைந்ததும், டிரக்கில் ஏற்றி 27 கி.மீ., தொலைவில் உள்ள பாலத்தின் அடியில் வைத்து எரித்து கொலை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில்., இவர்கள் அனைவரும் நேற்று காலை நேரத்தில் குற்றம் நடைபெற்ற இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டனர். இந்த விசாரணையின் போது நான்குபேரும் திட்டமிட்டு காவல்துறையினரை தாக்கியுள்ளனர். 

telungana doctor rapped and killed,

மேலும்., காவல்துறையினரை கொடூரமாக தாக்க முயன்றதை அடுத்து., சம்பவ இடத்தில் இருந்த காவல் துறையினர் பாதுகாப்பிற்க்காக தப்பி செல்ல முயன்ற நான்கு பேரையும் சுட்டு கொலை செய்தனர். இந்த சம்பவம் தெலுங்கானா மாநில மக்கள் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள மக்களால் வரவேற்கப்பட்டு கொண்டாடப்பட்டது. மேலும்., பெண்கள் தங்களின் ஆதரவை காவல்துறையினருக்கு தெரிவிக்கும் வகையில் பேருந்தில் சென்ற மாணவிகள் உற்சாக குரல் எழுப்பி சென்றது., நடனமாடியது போன்ற பாராட்டுக்கள் தொடர்ந்து குவிந்து வருகிறது. 

இந்த நிலையில்., குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் விஜய் ரூபானி மற்றும் எதிர்க்கட்சி தலைவரான பிரதேஷ் தானானி பாராட்டுகளை தெரிவித்திருந்த நிலையில்., அங்குள்ள பாவ் மாவட்டத்தில் உள்ள மகுவா நகரை சார்ந்த தொழிலதிபரான ராஜ்பா கோஹில் ரூ.1 இலட்சம் ரொக்கப்பரிசு வழங்குவதாகவும்., நமது நாட்டின் காவல்துறையினரின் நடவடிக்கைக்கு பெருமை அடைவதாகவும்., பெண் பிள்ளைகளுக்கு மதிப்பளித்துள்ள ஐதராபாத் காவல் துறையினருக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் பரிசு என்று ரூ.1 இலட்சம் வழங்குவதாக தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in telugana doctor rapped and killed case Gujarat business man announce reward


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->