ஆளுங்கட்சிக்கு தாவிய எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள்..! அரசியல் வட்டாரத்தில் திடீர் திருப்பம்..!! - Seithipunal
Seithipunal


அரசியல் கட்சிகளை பொறுத்த வரையில்., அரசியல் கட்சிகளில் இருக்கும் பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தங்களின் கொள்கைகளுக்கு ஒத்துபோகக்கூடிய கட்சிகளுக்கு அவ்வப்போது அணிமாறுவது இயல்பான ஒன்றாகும். அந்த வகையில்., ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுள்ள சம்பவம்., அங்குள்ள அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது. 

இராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த வருடத்தின் டிசம்பர் மாதத்தில்., சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிகளவு இடங்களை கைப்பற்றியது. மொத்தமாக சுமார் 200 தொகுதிகளில் காங்கிரஸ் 100 இடங்களில் வெற்றியடைந்த நிலையில்., ஆட்சியை கைப்பற்ற ஒரு இடம் மட்டுமே குறைவாக இருந்தது. 

இந்த விசயத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ராஷ்டிரி லோக் தளம் கட்சியும் ஆதரவு அளித்த நிலையில்., ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக அசோக் கெலாட் பதவியேற்றார். அனைத்தும் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில்., யாரும் எதிர்ப்பாராத வகையில் அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

பகுஜன் சமாஜ் கட்சி, bahujan samaj party,

அங்குள்ள பகுஜன் சமாஜ் கட்சியை சார்ந்த ஆறு எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துள்ளனர். இதனையடுத்து சட்டப்பேரவையில் 100 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சியானது., தற்போது 106 உறுப்பினர்களை கைவசம் வைத்துள்ளது. 

பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.

இதுமட்டுமல்லாது பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்.எல்.ஏக்களும்., இது குறித்த கடிதத்தை பேரவையின் தலைவர் சி.பி.ஜோஷிடம் நேற்று வழங்கியுள்ளனர். மேலும்., நடைபெற்று முடிந்த தேர்தலில்., பகுஜன் சமாஜ் கட்சியை சார்ந்த 6 எம்.எம்.ஏக்கள் வெற்றிபெற்ற நிலையில்., ஆறு பெரும் தங்களை காங்கிரசில் இணைத்து கொண்டதால்., கட்சித்தவள் நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Rajasthan mla changed party to congress


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->