திருமணத்தில் அசைவ சாப்பாடை சாப்பிட்டுவிட்டு., பதறியடித்து மருத்துவமனைக்கு ஓடிய 70 உறவினர்கள்.! மருத்துவர்கள் கூறிய பகீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள இராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் கிசாங்கர் நகரில் கடந்த திங்கள்கிழமையன்று திருமண விழாவானது நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு அந்த பகுதியை சார்ந்த பெரும்பாலான மக்கள் மற்றும் உறவினர்கள் என்று அனைவரும் பங்கேற்று திருமண விழாவை சிறப்பித்தனர். 

திருமண விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அசைவ வகை உணவுகள் மற்றும் இனிப்பு வகைகள் தாராளமாக பரிமாறப்பட்டு அனைவரும் சாப்பிட்டனர். திருமணம் நிறைவு பெற்றதை அடுத்து., விருந்தினர்கள் அனைவரும் அவர்களின் இல்லத்திற்கு சென்றுள்ளனர். 

அனைவரும் இல்லத்திற்கு திரும்பிய சில மணித்துளிகளிலேயே திடீர் உடல்நல குறைவால் அவதியுற்றுள்ளனர். மேலும்., வயிற்று வலி., வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு என்று அலறித்துடித்துள்ளனர். 

இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதியான அனைவருக்கும் தீவிர சிகிச்சையை அளித்து வருகின்றனர். இந்த மருத்துவமனையில் சுமார் 10 குழந்தைகள் உட்பட 70 நபர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இரவு நேரத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதற்கு பின்னர் அனைவரும் சீரான உடல் நலத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த சுகாதார துறையினர் உணவுகளின் மாதிரிகளை சேகரித்து., சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும்., கடுமையான வெயிலின் காரணமாக உணவுகள் கெட்டுப்போய் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவத்தை அறிந்த காவல் துறையினர் இதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in rajasthan marriage festival food convert poison 70 peoples injured


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->