ஆற்றை கடக்க உபயோகம் செய்யப்பட்ட லாரி..! சிக்கி தவித்த பள்ளி மாணவர்களின் அலறல்... வைரலாகும் பேரதிர்ச்சி வீடியோ..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையானது பெய்து வருகிறது. இதனால் பல மாநிலங்களின் முக்கிய நகர்கள் அனைத்தும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டது. இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து வந்த நிலையில்., பல இடங்களில் தொடர் மழையின் எதிரொலியாக பல உயிரிழப்புகளும் அரங்கேறி வருகிறது. 

இந்தியாவில் உள்ள கேரளா., கர்நாடகா., மும்பை., அசாம்., உத்திர பிரதேசம் போன்ற பல மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக மக்கள் அனைவரும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி அவதியுற்றனர். மேலும்., பலரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுமட்டுமல்லாது பெருமளவிற்கு சேதங்களும் ஏற்பட்டது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக., ஒரே நாள் இரவில் கொட்டி தீர்த்த கனமழையின் எதிரொலியாக ஒரே நாள் இரவில் 17 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த நிலையில்., இதனை போன்ற பெரும் துயரமானது பீகார் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. பீகாரில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக 20 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

flood, வெள்ளம்,

இந்த நிலையில்., இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆறில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கானது அதிகளவு ஏற்பட்டு., தரைப்பாலத்திற்கு மேலே சென்றது. இந்த வழியாக பயணம் செய்து கொண்டு இருந்த நிலையில்., ஆற்றின் அபாய அளவை தாண்டி வெள்ளமானது சென்று கொண்டு இருந்தது. 

இந்த வழியாக லாரியில் பயணம் செய்து வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்த 12 மாணவர்கள் பாலத்தில் இருந்து லாரி அடித்து செல்லப்பட்டதை அடுத்து., லாரியின் முன் பகுதியானது அரைபாதி மூழ்கிய நிலையில் உயிருக்காக போராடி அலறினர். இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் மாணவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகளானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in rajasthan 12 students rescue safely by public in river


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->