தொடர் மழை எதிரொலி.. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக நாகை,புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் மிதமான மழையும், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து, சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ள வானிலை மையம், 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு பலத்த காற்று வீசும் என்பதால், குமரி கடல், மன்னார் வளைகுடா பகுதிக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்., சென்னையில் அதிகாலை முதலாகவே திடீரென கனமழையானது பெய்து வந்த நிலையில்., தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நல்ல மழை பெய்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்காலில் மழை பெய்து வருவதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in puthuchery leave announced for school due to rain


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->