புனேவை சின்னாபின்னமாக்கிய பெரு மழை., வெள்ளம்..! ஒரு நாள் இரவில் 17 பேர் பலி., உயிருக்கு ஊசலாடி மரத்தில் தொங்கும் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழையானது புரட்டி எடுத்து வருகிறது. இந்த தருனத்தில்., அங்குள்ள மும்பை மற்றும் மேற்கு மராட்டிய பகுதிகளில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்ட நிலையில்., உயிர் பலிகளும் அடுத்தடுத்து ஏற்பட்டு., இலட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மகாராஷ்டிராவின் வரலாற்று சிறப்புமிக்க நகராக இருந்து வரும் புனேயை கடுமையான மழை பதம்பார்த்துள்ளது. நேற்று இரவு நேரத்தில் திடீரென பெய்ய துவனிய மழையானது., இன்று காலை வரை விடாமல் பெய்து கொண்டு இருந்தது. 

இந்த மழையின் காரணமாக அங்குள்ள சிங்காட் ரோடு., தானாக்வாடி., பாலாஜி நகர்., அம்பேகாவ்., சகாகர் சாலை., பார்வதி., கோலேவாடி மற்றும் கிர்கத்வாடி பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. அங்குள்ள ஆறுகளில் காட்டற்றுவெள்ளம் ஏற்பட்டு., புனே நகருக்குள் மழை நீர் புகுந்தது. அங்குள்ள பல தெருக்களில் சுமார் ஏழு அடிக்கும் மேலாக வெள்ளம் சென்றது. இதனால் கடும் அச்சத்துடன் உயிரை கையில் பிடித்து கொண்டு கழித்த நிலையில்., புனே மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியது. 

pune, pune flood, pune flood images, புனே, புனே வெள்ளம், புனே மழை வெள்ளம்,

புனே மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் வீடுகளின் மொட்டை மாடியில் தஞ்சமடைந்த நிலையில்., பலர் மரங்களில் ஏறி உயிரை கையில் பிடித்து கொண்டு இருந்தனர். மேலும்., அங்குள்ள சோலாப்பூர் சாலை பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் வீட்டின் கூரைகளில் சுமார் 300 பேர் தஞ்சமடைந்தனர். அதிகாலை வெளிச்சம் வந்ததும் மழையின் தாண்டவத்தை அறிந்த மக்கள் செய்வதறியாது திகைக்கவே., புனே நகரம் சின்னாபின்னமாகியது. வீதிகளில் குப்பைகள் அனைத்தும் வாகனங்களாக சூழப்பட்டு இருந்தது. 

pune, pune flood, pune flood images, புனே, புனே வெள்ளம், புனே மழை வெள்ளம்,

வெள்ளத்தின் பிடியில் வந்த வாகனங்கள் அங்கங்கே மோதி உருக்குலைந்து இருந்த நிலையில்., பணியை முடித்து வீட்டிற்கு திரும்பிய பலரும் வாகனத்துடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். மேலும்., மும்பை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருக்கும் தர்காவில் உறங்கிக்கொண்டு இருந்த ஐந்து பேர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அங்குள்ள ஆர்னேஸ்வரர் பகுதியில் வீடு இடிந்து விழுந்து., ஒரே குடும்பத்தை சார்ந்த ஐவர் பலியாகினர். காருக்குள் பிணமாக இருவர் மீட்கப்பட்டனர். புனேயை புரட்டியெடுத்த மழையின் காரணமாக 17 பேர் ஒரே இரவில் பலியாகினர். 600 வாகனங்கள் சேதமடைந்துள்ளது. 

மேலும்., அங்கு பெய்த கனமழையின் காரணமாக நஸாரா அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதை அடுத்து., கரையோரம் இருந்த மக்கள் அனைவரும் வெள்ளத்தில் மிதந்த நிலையில்., சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரையோர மக்கள் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டு., பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும்., வெள்ளத்தால் சூழப்பட்ட 44 இடங்களில் போர்க்கால மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும்., புனேயில் மொத்தமாக ஒரே நாளில் 20 செ.மீ மழையளவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரண உதவிகளை அரசு தொடர்ந்து செய்து வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in pune heavy rainfall peoples died 17 members over night


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->