புனே வந்த பயணிக்கு கரோனா.. நடுவானில் பதறிப்போன விமான பயணிகள்.. திக்.. திக் நிமிடங்கள்..!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டினை மையமாக வைத்து பரவத்துவங்கிய கரோனா வைரஸானது உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி உள்ளது. தற்போது சீன நாட்டில் மட்டும் இந்த வைரஸின் தாக்கத்திற்கு 803 பேர் பலியாகியுள்ளனர். 

இந்த வைரஸின் தாக்கம் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உட்பட சுமார் 25 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த நோயின் காரணமாக இந்தியாவின் கேரள மாநிலத்தில் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில், பிற இந்திய மாநிலங்கள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், சீனாவில் இருந்து தாயகம் திரும்பும் நபர்களுக்கு விமான நிலையத்திலேயே சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த சமயத்தில், நேற்று காலை நேரத்தில் டெல்லியில் இருந்து புனேவுக்கு ஏர் இந்திய விமானம் பயணிகளுடன் வந்து சேர்ந்த நிலையில், இந்த விமானத்தில் பயணம் செய்த சீன பயணி ஒருவருக்கு, பயணத்தின் போதே குமட்டல் ஏற்பட்டுள்ளது. பின்னர் சிறிது நேரத்திலேயே தனது இருக்கையில் வாந்தி எடுத்துள்ளார். 

இதனையடுத்து இவருக்கு கரோனா பாதிப்பு இருக்கலாம் என்று விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டு, விமான பயணிகள் பீதிக்கு உள்ளாகவே, விமானம் புனே விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் மருத்துவமனைக்கு விரைவாக அழைத்து செல்லப்பட்டார். 

சீன பயணியை தனிமைப்படுத்திய மருத்துவர்கள், தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in pune flight china passenger corona virus symptoms checking admit hospital


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->