பப்ஜி பாட்னருடன் என்னை சேர்த்து வைத்து விடுங்கள்.! அவன் தான் நல்லா சுடுவான்., என் கணவருக்கு ஒன்றும் தெரியாது.!! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களாக இளைஞர்கள் மற்றும் பெண்கள்., பிரபலங்கள் என அனைவராலும் கவர்ந்திழுக்கப்பட்ட விளையாட்டு பப்ஜி. இந்த விளையாட்டை விளையாட துவங்கிய சிலர்., விளையாட்டை தொடர்ந்து விளையாடிக்கொண்டு அதற்கு அடிமையாகியுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் பல விதமான உடல் நல குறைவிற்கு ஆளாகுவதும் தொடர்கதையாகியுள்ளது. 

இதன் காரணமாக ஏற்படும் உடல் நலக்குறைவுகளை பல முறை மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள் பல முறை எடுத்து கூறினாலும்., அதனை கண்டு கொள்ளாது தொடர்ந்து விளையாட்டை தொடர்ந்து விளையாடும் முனைப்பிலேயே இருந்து வருகின்றனர். இதன் காரணமாக பலர் நரம்பு தளர்ச்சி., கண் பிரச்சனை மற்றும் தூக்கமின்மை போன்ற பல பிரச்சனைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். 

இதனால் ஏற்பட்ட பல பிரச்சனைகளை அடுத்து., இந்த விளையாட்டிக்கு எதிராக பல வழக்குகள் தொடர்ந்து தொடுக்கப்பட்டு., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள்., சுமார் ஆறு மணி நேரம் மட்டுமே ஒரு நாளைக்கு இந்த விளையாட்டை விளையாட முடியும் என்று., அதற்கான அமைப்புகளை மாற்றி முடக்கம் செய்து இருந்தனர். 

இந்த நிலையில்., குஜராத்தை மாநிலத்தை சார்ந்த பெண்மணி தனது கணவருடன் விவாகரத்து வேண்டும் என்றும்., இவரை விவாகரத்து செய்து பின்னர் பப்ஜி நண்பருடன் திருமணம் செய்யப்போவதாக தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்பாட்டுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் வாழ்ந்து வரும் தம்பதிக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இந்த சமயத்தில் இவர் தனது அலைபேசியில் பப்ஜி செயலியை பதிவிறக்கம் செய்து விளையாடிய நிலையில்., இவரது பக்கத்துக்கு தெருவில் வசிக்கும் இளைஞர் இவருடன் சேர்ந்து பப்ஜி விளையாடி கொண்டு இருந்துள்ளார். இந்த பழக்கம் இவர்களுக்குள் காதலாக மாறவே., இருவரும் காதலித்து வந்த நிலையில்., தனது கணவருடன் விவாகரத்து பெற்று தனது., பப்ஜி நண்பருடன் சேர்த்து வைக்குமாறு தொண்டு நிறுவனத்தை நாடியுள்ளார். இந்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியை அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in pubg game adit girl want divorce to married pubg partner


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->