குடும்பத்துடன் இன்ப சுற்றுலா... விடுதியறையில் காத்துக்கொண்டிருந்த விபரீதம்.. 8 பேர் பரிதாப பலி..!! - Seithipunal
Seithipunal


நேபாள நாட்டில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் அதிகளவில் அருவிகள் நிறைந்துள்ளது. இந்த அழகினை ரசிப்பதற்கு பல்வேறு நாட்டை சார்ந்தவர்களும் அங்கு சுற்றுலாவிற்கு சென்று வருகின்றனர். 

இந்த நிலையில், விடுமுறை நாட்டினை கொண்டாடுவதற்கு நேபாள நாட்டிற்கு சென்ற, இந்தியாவுடைய கேரள மாநிலத்தை சார்ந்த 8 பேர் எரிவாயு கசிவின் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளா மாநிலத்தை சார்ந்த 15 சுற்றுலாப்பயணிகள், நேபாள நாட்டில் உள்ள மலைப்பகுதிக்களுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். இந்த நேரத்தில் அங்குள்ள மகாவான்பூர் மாவட்டத்தில் இருக்கும் டமான் பகுதியில் உள்ள எவரெஸ்ட் பனோரமா என்ற சொகுசு பங்களாவில் இரவு தங்கியுள்ளனர்.  

இந்த சொகுசு பங்களாவில் 4 அறைகள் முன்பதிவு செய்திருந்த நிலையிலும், ஒரு அறையில் 8 பெரும், மற்றொரு அறையில் 7 பெரும் தங்கியுள்ளனர். நேபாளத்தில் குளிர் மிகவும் அதிகம் என்பதால், விடுதிகளில் எரிவாயு ஹீட்டர் இருக்கும். 

இதனால் அறையின் கதவு மற்றும் ஜன்னல் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருக்கும். இந்நிலையில், 8 பேர் தங்கியிருந்த அறையில் கதவு ஜன்னல் பூட்டப்பட்டு ஹீட்டர் இயக்கப்பட்ட சில நிமிடத்திற்கு உள்ளாகவே அனைவரும் அடுத்தது மயக்கமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்களை அங்குள்ள மருத்துவமனைக்கு சொகுசு விடுதியை சார்ந்த ஊழியர்கள் கொண்டு சென்ற நிலையில், இவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில், இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in nepal country kerala tourist died toxic air attack


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->