மகாராஷ்டிராவில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இன்னல்களை சந்தித்துள்ள தமிழ் பெண்கள்... கண்ணீருடன் கோரிக்கை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் வேளாண் உற்பத்தி குறித்து பணிக்குச் சென்ற தமிழகத்தைச் சார்ந்த 16 பட்டதாரிப் பெண்கள் உள்ளிட்ட 35 பேர் கரோனா தொடர்பாக தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு அடிப்படை வசதியின்றி தவிக்கும் அவலம் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சோலாப்பூர் பகுதியில் செயல்பட்டுவரும் வேளாண் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில், தென் மாநிலத்தைச் சார்ந்த 35 க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் பொறியியல் உள்ளிட்ட பட்டப்படிப்பு பயின்றவர்கள் ஆவார்கள். இவர்கள் கடந்த 6 மாதத்திற்கு மேலாக அங்கு தங்கி பணிபுரிந்து வரும் நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 

ஆந்திராவில் இருந்து வந்த பெண் ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இவர்கள் தங்கியிருந்த விடுதி மூடப்பட்டு, அங்கிருந்த 35 பெண்கள் கல்லூரி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கு ஏற்கனவே 95 ஆண்களும் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், போதிய பாதுகாப்பு வசதி இல்லை என்றும் பெண்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். 

மேலும், தமிழக பெண்கள் 16 பேர், கேரள பெண் ஒருவர் ஆகியோர் அங்குள்ள பள்ளியில் தங்கவைக்கப்பட்டு, மீதமுள்ளவர்கள் வேறு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக இந்த பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டு, பெண்களுக்கு முறையான உணவு மற்றும் நாப்கின் போன்ற அத்தியாவசிய தேவைகளில் கிடைக்கப் பெறாமலும் இருந்துள்ளது. 

கல்லூரியில் குளியலரையில் கதவுகள் கூட சரியாக பூட்டப்படாத நிலையிலும், அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். பெண்கள் தமிழகஅரசு தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும், மொழி தெரியாத மாநிலத்தில் அச்ச உணர்வோடு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு நாட்களையும் கழித்து வருவதாக தங்களின் மன வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Mumbai tamil girls struggled request to tamilnadu govt


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->