எட்டி நின்று இரயில் டிக்கெட் எடுக்கும் பயணிகள்.. பாதுகாப்பு பணியில் இரயில்வே காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் பீதி காரணமாக பொதுமக்கள் கைகுலுக்குதல், தொடுதல் போன்றவற்றை தங்களுக்குள் தவிர்த்துள்ளனர். இந்தியா முழுவதும் கரோனாவை கட்டுக்குள் வைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸிற்கு 270 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 5 பேர் பலியாகியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்த வரையில் இரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் விமான நிலையத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 

மேலும், வெளியூர் மற்றும் மின்சார ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் முந்தியடித்துக்கொண்டு பயணசீட்டுகளை பெற்று வந்த நிலையில், இதனைகவனித்த இரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு கரோனா வைரஸ் பரவக்கூடாது என்று 3 அடி இடைவெளி விட்டு நிற்க அறிவுறுத்தியுள்ளனர். 

இதனை குறிக்கும் வகையில் கோடுகளையும் போட்டு நிற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இரயில்வே காவல் துறையினர் இவ்விஷயத்தை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In mumbai railway station peoples keep distance


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->