இளம்பெண்களை கடத்தி விபச்சாரத்திற்கு வலுக்கட்டாயமாக தள்ளும் கொடூர கும்பல்.! பின்னணியில் செயல்படுவது யார்?., கைதான கும்பல்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதுமாகவே பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகளுக்கு மத்தியில் போராடி பெண்கள் தங்களின் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மும்பையை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு., இளம் மாணவிகளை கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் இணைய கும்பல்களை காவல் துறையினர் காத்திருந்து கைது செய்தனர். 

இந்த நிலையில்., அங்குள்ள காமேந்திர புரத்தில் அரசு அனுமதியுடன் விபசாரமானது நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில்., பிற மாநிலத்தில் இருந்து மும்பைக்கு பணிகளுக்காக மற்றும் கல்லூரி படிப்பிற்க்காக வரும் மாணவிகளை கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதனை அறிந்த காவல் துறையினர் உடனடியாக அங்குள்ள பகுதியில் சோதனை செய்ய திட்டமிட்டனர். அந்த சோதனையில்., சுமார் 100 க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் மற்றும் மாணவிகளை காவல் துறையினர் மீட்டனர். இதுமட்டுமல்லாது இவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கொடூரர்களிடம் இருந்து ரூ.6 இலட்சத்தையும் கைப்பற்றினர். 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., வெளிமாநிலங்களில் இருந்து வரும் பெண்களை குறிவைத்து இந்த செயலை அரங்கேறியது தெரியவந்தது. இதனையடுத்து வெளிமாநிலத்தை சார்ந்த பெண்களை அவர்களின் இல்லத்திற்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு பின்னணியில் யார் உள்ளார்கள் என்ற விசாரணையிலும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Mumbai prostitution gang arrested 100 girls rescued by police


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal