நதிநகரத்தின் மெட்ரோ சேவையை துவங்கி வைத்த பிரதமர்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் நதிநகரம் என்று அழைக்கப்படும் மும்பையில்., தற்போதுவரை மொத்தமாக 337 கிமீ தூரத்தில்., 14 மெட்ரோ இரயில் சேவை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி., மும்பை புகார்நகர் காட்கோபர் - வெர்சோவா இரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ இரயில் சேவை செயல்பட்டு வருகிறது. 

தகிசர் முதல் டி.என்.நகர் மற்றும் டி.என். நகர் முதல் மண்டலா இரயில் நிலையம்., கோபாலா - பாந்திரா - சிபீஸ் இரயில் நிலையம்., வாடலா - காட்கோபர் - காசர்வடவலி இரயில் நிலையம்., தகிசர் கிழக்கு - அந்தேரி இரயில் நிலைய திட்டங்களின் கீழ் வழித்தடங்கள் தொடர்ந்து அமைக்கப்பட்டு வருகிறது. 

இந்த தருணத்தில்., 10 ஆவது மற்றும் 11 ஆம் - 12 ஆம் கட்ட மெட்ரோ இரயில் வழித்தடங்கள் அமைப்பதற்கு மாநிலத்தின் மந்திரி சபை ஒப்புதல் அளித்த நிலையில்., 10 ஆவது வழித்தட பணிகளுக்கு ரூ.4 ஆயிரம் 475 கோடி செலவில் தானே காய்முக் முதல் - மிராரோடு இடையேயுள்ள பகுதியினையும்., 11 ஆவது மெட்ரோ இரயில் வழித்தடமான வடாலா - சி.எஸ்.எம்.டி இடையேயான 12 கிமீ தூரத்தினை சுரங்க பாதையாக அமைக்க ரூ.8 ஆயிரத்து 739 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மேலும்., 12 ஆவது வழித்தடமான கல்யாண் - நவிமும்பை இடையேயான 20.7 கிமீ தூரத்தினை ரூ.5 ஆயிரத்து 865 கோடி ரூபாய் செலவில் அமைக்கவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரயில் நிலைய பாதைகளுக்கு பூமி பூஜை நேற்று துவங்கிய நிலையில்., ஜியோ உலக மைய கட்டிடத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். 

இந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இரயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி., மெட்ரோ இரயில் குறித்த பிராண்ட் விஷன் ஆவணத்தையும் துவங்கி வைத்தார். இதுமட்டுமல்லாது ஏழாவது மெட்ரோ இரயில் திட்டத்தின் கீழ் இருந்த பாண்டோங்கிரி மெட்ரோ இரயில் நிலையத்தையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்., சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் கவர்னர் பகத் சிங் கோஷியாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mumbai metro train service started by modi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->