36 தங்க பதக்கங்கள்., 32 பதக்கங்களை பெற்ற வீராங்கனை., லாரி மோதி உயிரிழந்த பரிதாபம்.! கண்ணீரில் பெற்றோர்கள் மற்றும் சக தோழிகள்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் இருக்கும் டோம்பிவிலி பல்லவா சிட்டி பகுதியை சார்ந்த மாணவி ஜானவி மோரே (வயது 18)., இவர் கேரம் போட்டியின் வீராங்கனை ஆவார். கேரம் போட்டியில் பங்கேற்கும் இவர் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள்., தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு சுமார் 68 பதங்கங்களை பெற்றவர். இந்த 68 பதக்கங்களில் 36 பதக்கங்கள் தங்க பதக்கங்கள் ஆகும். 

இவர் நேற்று மாலை நேரத்தில் தனது வீட்டிற்கு எதிர்புறம் இருக்கும் சாலையை கடந்து சென்று கொண்டு இருந்தார். அந்த நேரத்தில்., அந்த வழியாக வந்த லாரியானது எதிர்பாராத விதமாக சாலையை கடந்து கொண்டு இருந்த ஜானவியின் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த நிலையில்., இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்காக போராடிக்கொண்டு இருந்தார். 

இந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்., அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதித்தனர். இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில்., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில்., மாணவி சாலையை கடக்க தயாராக இருந்த சமயத்தில்., அங்கு பணியாற்றிய போக்குவரத்து காவல் துறை அதிகாரி அலட்சியமாக வாகனங்களை தொடர்ந்து அனுமதித்ததே இந்த உயிரிழப்பிற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணையை காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர். தங்க பதக்கத்தை வென்ற வீராங்கனை உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mumbai girl died accident when crossing road she is carom player


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->