மதுகுடிக்க ஆசைப்பட்டு ரூ.1 இலட்சத்தை இழந்த பெண்மணி.. மது ஆசாமிகளே உஷார்.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸ் அதிகளவு பரவி வருவதால் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுக்கடைகளை மூடப்பட்ட நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்த பெண்மணி, கணவருடன் சேர்ந்து இணையத்தில் மதுபானம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

இவர் இணையத்தில் தேடிய சமயத்தில், மதுபானம் கிடைக்கும் என்ற தகவல் கிடைக்கவே, குறித்த அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசுகையில் ரூ.3 ஆயிரம் பணம் கொடுக்கும் பட்சத்தில் மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படும் என்று மறுமுனையில் பேசிய நபர் கூறியுள்ளார். 

இதனையடுத்து பெண் தனது கணவரின் ஏ.டி.எம் கார்டுகளின் விபரத்தை தெரிவிக்கவே, ரூ.30 ஆயிரம் வங்கிக்கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி குறித்த நபரை மீண்டும் தொடர்பு கொள்ளவே, பணத்தை திருப்பி தருவதாக கூறி ரூ.1 இலட்சத்தை பறித்துள்ளார். 

நூதன முறையில் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதை அறிந்த பெண்மணி, கணவருடன் அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கவே, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். மேலும், இணையத்தில் மதுபானம் ஏதும் விற்பனை செய்ய அனுமதி கிடையாது, போலியான தகவலை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mumbai girl cheated by online fraud culprit


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->