கூடியது அவசர கூட்டம்..! கூட்டணி நீடிக்குமா? முறியுமா?..! அதிரடி ஆட்டத்தில் பாஜக.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதத்தின் 21 ஆம் தேதியன்று சட்டசபை தேர்தலானது நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பங்கேற்க பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி குறித்த தகவலை ஏற்கனவே அறிவிரித்திருந்த நிலையில்., இவர்களுக்குள் தொகுதி பங்கீடு குறித்த பிரச்னையால் இழுபறியானது நீடித்து வருகிறது. 

இந்த தருணத்தில்., பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா., டெல்லியில் வைத்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருடன் ஆலோசனை நடத்திய நிலையில்., பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் முதலைமச்சர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் மத்திய மந்திரியான நிதின் கட்கரி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். 

இந்த சமயத்தில்., சிவசேனா கட்சிக்கு 120 தொகுதிகள் மட்டும் ஒதுக்கீடு செய்ய முடியும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்., இந்த முடிவிற்கு சிவசேனா கட்சி சம்மதம் தெரிவிக்காததால்., மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடுவதற்கு தயாராகி வருதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

uddhav thackeray, shiv sena,

இந்த முடிவையே தற்போது செயல்படுத்தி பார்க்கலாம் என்றும் சிவசேனா முடிவு செய்துள்ளதாகவும்., இந்த விஷயம் குறித்த ஆலோசனையை இன்று நடத்த முடிவும் செய்யப்பட்டது. இந்த தருணத்தில்., அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தின் இறுதியிலேயே கூட்டணி மற்றும் தனித்து போட்டியிடுதல் குறித்து முடிவு எடுக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. 

தற்போது நடைபெறவுள்ள சிவசேனாவின் அவசர கூட்டத்திற்கு., சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள்., தற்போதைய சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள்., மந்திரிகள்., தற்போது தேர்தலை சந்திக்கவுள்ள போட்டியாளர்கள் என பலரும் வரவுஉள்ளனர். இந்த கூட்டத்தின் முடிவிலேயே கூட்டணி நீடிக்குமா? அல்லது முறியுமா? என்பது குறித்த தகவல் வெளியாகும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Mumbai election party friendship bjp with shiv sena


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->