13 வயது சிறுமியை கழிவறையில் வைத்து கூட்டுப்பலியால் பலாத்காரம் செய்த சோகம்.. வெளியான தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு நாள் ஒன்றுக்கு 89 கற்பழிப்பு குற்றங்கள் சராசரியாக நடைபெறுவதாக ஆய்வறிக்கை வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பிரச்சனையை குறைக்கும் பொருட்டு சட்டதிட்டங்கள் தொடர்ந்து கடுமையாக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பகுதியில் நடைபாதையில் 13 வயது சிறுமியுடன் தாயார் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், சிறுமியை கடந்த 2015 ஆம் வருடத்தின் மார்ச் மாதத்தில் சுற்றுலா வழிகாட்டி சாய்பாஜ் சேக் (வயது 20) மற்றும் இஸ்ரத் சேக் (வயது 20) ஆகியோர் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

சம்பவத்தன்று சிறுமியின் தாயார் இல்லாத நிலையில், சிறுமியை அங்குள்ள பொதுக்கழிப்பறைக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி அழுது கொண்டே தனது தாயாரிடம் சென்று இது தொடர்பான விவரத்தை தெரிவித்துள்ளார். 

இதனை கேட்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளான தாயார், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்தனர். 

இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாகி உள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்களுக்கு 20 வருட கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.12,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mumbai court order jail 20 years 13 year child girl sexual harassment case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->