16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த காவல் அதிகாரி விவகாரத்தில்... அதிர்ச்சி முடிவெடுத்த சிறுமி.. வெளியான பேரதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பையில் 16 வயதுடைய சிறுமியொருவர் தனது பிறந்தநாளை இல்லத்தில் கொண்டாடியுள்ளார். இவரது பிறந்தநாளை சிறப்பிக்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் வருகை தந்து பிறந்தநாளை சிறப்பித்துள்ளனர். இந்த பிறந்தநாள் விழாவிற்கு சிறுமியின் உறவினர் என்ற முறையில் நவிமும்பை மாநகர போக்குவரத்து காவல் ஆணையர் நிஷிகாந்த் மோர் (Nishikant More) வருகை தந்துள்ளார். மேலும்., போக்குவரத்து காவல் அதிகாரியான நிஷிகாந்த் மோருக்கும் - சிறுமியின் குடும்பத்தாருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக தெரியவருகிறது. இது தொடர்பாக இரு குடும்பத்தாருக்கும் இடையே பல பிரச்சனை நடந்து வந்துள்ளது. இந்நிலையில்., சிறுமியின் பிறந்தநாள் விழாவிற்கு வருகை தந்த நிஷிகாந்த் மோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

DIG Nishikant More, DIG Nishikant More images, mumbai 16 year girl sexual torture,

அனைவரின் முன்னிலையியலே முகம் சுளிக்கும் வகையில் சிறுமிக்கு பாலியல் ரீதியிலான தொல்லைகள் கொடுத்த நிலையில்., சிறுமியிடம் தாம்பத்தியம் குறித்த விளக்கங்களையும் அளித்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்த அனைவரும் இவரின் செயல்களை கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில்., இதனை கண்டு பதறிப்போன சிறுமியின் தந்தை சண்டையிட்டுள்ளார். இந்த சமயத்தில் பதிலளித்த நிஷிகாந்த் மோர் உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று அதிகாரமாக தெரிவித்ததாகவும்., போதை மயக்கத்தில் இருந்ததாகவும் தெரியவருகிறது. இதனைத்தொடர்ந்து இதுதொடர்பாக காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்த சமயத்தில்., காவல் துறையினர் இது தொடர்பான புகாரை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும்., இந்த சம்பவம் கடந்த ஜூன் மாதத்தின் 5 ஆம் தேதியன்று நடைபெற்றுள்ளது. 

இதனால் செய்வதறியாது திகைத்த பெண்ணின் குடும்பத்தார் இது தொடர்பாக இணையத்தில் தகவலை பதிவு செய்து தொடர்ந்து பல விதமான அழுத்தங்களை கொடுத்து வந்தனர். இந்த பதிவு இணையத்தின் மூலமாக அனைவருக்கும் தெரியவந்தாலும் எந்த விதமான பயனும் இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இரவு நேரத்தில் நிஷிகாந்த் மோரை காரில் வைத்து பொதுமக்கள் முற்றுகையிட்டனர். நிஷிகாந்த்திடம் சரமாரியாக பொதுமக்கள் கேள்விகளை கேட்க துவங்கவே., இது தொடர்பான வீடியோ காட்சிகளும் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு பின்னர் வைரலாக துவங்கியது. பின்னர் இது தொடர்பாக மும்பை காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்தனர். 

இந்நிலையில்., தற்போது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நிஷிகாந்த் மோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும்., இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்த சமயத்தில்., கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக இவ்வழக்கு தொடர்பான புகார் மனு வந்த சமயத்தில்., இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருப்பது தெரியவந்தது. இருவரும் உறவினர்கள் என்பதால் அவர்கள் பேசி தீர்த்துக்கொள்வார்கள் என்று எண்ணினோம்., ஆனால் தற்போது உண்மை தெரியவந்துள்ளதால் விசாரணையை துவக்கியுள்ளோம். 

sexual harassment,

நிஷிகாந்த மோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த சிறுமியின் தந்தை " காவல் துறையினர் போல எனக்கு யோசனை செய்யும் திறமை இருந்தால் நான் எதற்கு இவ்வாறு செய்ய போகிறேன். எனக்கு எனது மகள் தான் முக்கியம்.. அன்று அத்துணை ஆதாரங்கள் காண்பித்தும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய மறுப்பு தெரிவித்தனர். இன்று பலருக்கும் பிரச்சனை தெரியவந்த நிலையில் வழக்குப்பதிவு செய்கின்றனர். எங்களுக்குள் சொத்து பிரச்சனை இருப்பது உண்மை தான்.. சொத்துக்காக மற்றொரு நபர் மீது பொய்யான புகார் அளிக்கும் அளவிற்கு நான் கெட்டவன் இல்லை என்று தெரிவித்தார்.

இந்த நேரத்தில் சிறுமி தனது இறப்பிற்கு காவல் அதிகாரி நிஷிகாந்த் மோரே காரணம் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு மாயமாகினார். இதனையடுத்து இந்த விஷயம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து நிஷிகாந்த் மோரே மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் அதிகாரி தின்கர் சால்வே ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து அறிவிக்கப்பட்டது. சிறுமி மாயமாகியிருந்த நிலையில், சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். தற்போது சிறுமி உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டோராடூனில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். இவரோடு இருந்த 19 வயது நண்பரும் மீட்கப்பட்டுள்ள நிலையில், சிறுமி மும்பைக்கு அழைத்துவரப்பட்டு விசாரணையில் உள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mumbai child sexual torture by police DIG


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->