பாஜக - சிவசேனாவின் தனித்தனி திட்டம்..! கோட்டை யாருக்கு?.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தொகுதிகளான 288 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்து., தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில்., எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 

கடந்த ஆட்சிக்காலத்தில் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் இருந்து கூட்டணி வைத்திருந்த பாரதிய ஜனதா கட்சி மற்றும் - சிவசேனா கட்சிகள் கூட்டணியமைத்து தேர்தலை சந்தித்த நிலையில் 161 தொகுதிகளை கைப்பற்றியது. இதனையடுத்து இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை பெற்றது. 

இந்த தேர்தலில் கூட்டணிக்கட்சியாக இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சி 105 இடங்களிலும்., சிவசேனா கட்சி 56 இடங்களிலும் வெற்றிபெற்ற நிலையில்., இவர்களுக்குள் இருந்த முதலமைச்சர் பதவி குறித்த போட்டியால் புதிய அரசு பதவியேற்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. 

இரு கட்சிகளும் முதலமைச்சர் பதவியை இரண்டரை வருடங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும்., மந்திரி பதவியையும் சரிபாதியாக பிரித்து தர வேண்டும் என்பதில் சிவசேனா உறுதியாகி உள்ளதாலும்., மும்பையில் உள்ள ஒர்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உத்தவ் தாக்கரேயின் மகனான ஆதித்ய தாக்கரேவை முதல்வராக்கவும் சிவசேனா திட்டமிட்டுள்ளது. 

இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான பிரச்சனை நிலவி வரும் காரணத்தால்., இதனை சாதகமாக உபயோகம் செய்து கொள்ள காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி முயற்சித்து., சிவசேனாவுடன் இணைந்து ஆட்சியமைக்க திட்டம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில்., இரு கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆளுநரை தனித்தனியாக சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mumbai assembly bjp cold fight shiv sena


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->