அசுர கோபத்தில் வெறித்தனமாக பப்ஜி விளையாட்டு.. மூளையில் இரத்தம் தெறித்து துடிதுடித்து பலியான வாலிபர்.!! - Seithipunal
Seithipunal


தற்போதுள்ள நிலையில் இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்களிடமும் பப்ஜி விளையாட்டு வைரலாகி வருகிறது. இந்த விளையாட்டு அலைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்டு உயர் தொழில்நுட்பம் மற்றும் கிராபிக்ஸ் போன்ற காட்சிகளால் அதிகளவில் விளையாடப்பட்டு வருகிறது.

அதிகளவு நேரம் மற்றும் காலத்தினை வீணடித்து விளையாட்டிற்கு அடிமையாகி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த பெற்றோர்கள் எடுக்கும் முயற்சியில் விபரீதம் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. மேலும், பலர் உடல் ரீதியான பிரச்சனையும் சந்தித்து வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் வசித்து வந்த 25 வயதுடைய இளைஞர், ஆக்ரோஷத்துடன் பப்ஜி விளையாடி மூளைபக்கவாதத்தால் பரிதாபமாக பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே அருகேயிருக்கும் ஷின்டேவடி பகுதியை சார்ந்தவர் ஷர்மல் மீமான். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பப்ஜி விளையாடி கொண்டு இருந்த நேரத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இவரை மீட்ட பெற்றோர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சென்று அனுமதி செய்யவே, இவரது மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனளிக்காது, பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், விசாரணையில் மூளைக்குள் செல்லும் இரத்த ஓட்டம் தடைபட்டு இளைஞர் உயிரிழந்து இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், எந்த விளையாட்டாக இருந்தாலும் அதிக நேரம் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணிக்குமாறு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in maharastra youngster died hardly play pubg game


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->