கைக்கு பாயும் புலி.. மிரளும் தாமரை?..! தயாராகும் கடிகாரம்..!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில்., அம்மாநிலத்தில் போட்டியிட்ட எந்த கட்சிக்கும் தன்பெரும்பான்மை கிடைக்காத நிலையில்., ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற பட்சத்திலும்., சுமார் 161 இடங்களில் வெற்றிபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியானது., சிவசேனா கட்சியிடையே இழுபறியானது நீடித்து வருகிறது.

மேலும்., சிவசேனா கட்சியின் தரப்பில் அனைத்திலும் சமபங்கு கேட்டு பிரச்சனை செய்து வரும் நிலையில்., இது குறித்த கூற்றை பாரதிய ஜனதா கட்சியானது தொடர்ந்து நிராகரித்து வருவதால் இழுபறி தொடர்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையை உபயோகம் செய்து காங்கிரஸ் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி., சிவசேனாவுடன் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. 

இது குறித்த தகவலை முதலில் மறுத்த சிவசேனா கட்சியினர் தற்போது., இது தொடர்பான ஆலோசனையை நடத்தி வருவதாகவும்., சிவசேனா கட்சியின் எம்.பி.சஞ்சய் இராவத் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தினார். பின்னர் உத்தவ் தாக்கரே இது தொடர்பாக அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 

இந்த சமயத்தில் தங்களின் திட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியை நாளை டெல்லியில் சந்தித்து பேசுவதற்கு சரத்பவார் தயாராக உள்ள நிலையில்., காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி உசேன் தல்வாய்., சோனியா காந்திக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் "கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது காங்கிரஸ் வேட்பாளர்களான பிரதீபா பாடீல் மற்றும் பிரணாப் முகர்ஜியை ஆதரித்து சிவசேனா செயல்பட்டது.

இதனால் தற்போது ஆட்சியமைக்க சிவசேனா ஆதரவு கேட்டுள்ளதால்., இதனை ஆதரித்து நாம் செயல்பட வேண்டும். இதன் மூலமாக மட்டுமே பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியில் இருந்து விரட்ட இயலும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில்., காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான மல்லிகார்ஜுனா சிவசேனைக்கு ஆதரவு அளிப்பதை எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து முதலில் திட்டமிட்டபடியே சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சுயேச்சை ஆகியவை ஒன்றிணைந்து ஆதியமைக்க திட்டம் தீட்டி ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும்., வரும் 7 ஆம் தேதிக்குள் புதிய அரசு பதவியேற்காத பட்சத்தில் ஜனாதிபதி ஆட்சியானது அமலுக்கு வரும் என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்ததற்கு சிவசேனா கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

மேலும்., இருதரப்பிலும் மீண்டும் பேச்சு வார்த்தையை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில்., நம்பிக்கை வாக்கெடுப்பில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் சிவசேனா காட்சிகள் சிறிய கட்சியுடைய ஆதரவுடன் வெற்றி பெறுவது குறித்து திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in maharastra shiv sena new alliance with congress parties


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->