கொடுத்த வாக்கை  பாஜக காப்பாற்ற வேண்டும்.. கூட்டணி கட்சி தலைவர் பகீர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் மாதம் 21 ஆம் தேதியன்று, சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில்., காங்கிரஸ் கட்சியானது எதிர்க்கட்சியாக இருந்து வந்த நிலையில்., தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சரியான தொகுதிகளில் போட்டியிடப்போகிறது. இதனை போன்று தற்போது ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் - சிவசேனா கட்சியும் கூட்டணியில் இணைந்துள்ளது. 

பாரதிய ஜனதா கட்சி மற்றும் சிவசேனா கட்சியினை பொறுத்த வரையில்., தொகுதி பங்கீடு தொடர்பான பிரச்சனை தற்போது வரை இழுபறியில் இருந்து வரும் நிலையில்., இரண்டு கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலின் போதே சட்டமன்ற தேர்தலுக்கான உடன்பாட்டையும் செய்துள்ளதாக சிவசேனா கூறுகிறது. 

uddhav thackeray, uddhav thackeray images,

இவர்களின் பேச்சுவார்த்தையின் படி இரு கட்சிகளும் சமமான தொகுதியில் போட்டியிடுவது மற்றும் முதலமைச்சர் பதவியை சுமார் இரண்டரை வருடங்கள் பகிர்ந்து கொள்வது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில்., நாடாளுமன்ற தேர்தலின் வெற்றி மற்றும் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டது குறித்த செயல்பட்டால் செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக பாஜக கூறியுள்ளது. 

இதன் காரணமாக இந்த சட்டசபை தேர்தலில் சிவசேனா கட்சிக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய பாஜக முடிவு செய்துள்ளதாகவும்., இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீட்டிற்கான இழுபறி தொடர்ந்து நீடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியான நிலையில்., தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அமித்ஷாவும் சிவசேனா கட்சியை சொல்லாமலேயே இருந்தார். 

இது பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில்., முதலைமச்சர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும்ம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தொகுதி பங்கீடு குறித்து செய்தியாளரையே சந்திக்க இருப்பதாக இருந்த நிலையில்., இந்த தகவலுக்கு சிவசேனா மறுப்பு தெரிவித்தது. மேலும்., பாஜகவும் தனது நிலையில் இருந்து பின்வாங்கியுள்ளதால்., இந்த கூட்டணி நீடிக்குமா? என்ற பரபரப்பும் நிலவி வருகிறது. 

shiv sena,

இந்த விஷயம் குறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் செய்தியாளர்ளுக்கு அளித்த பேட்டியில்., மகாராஷ்டிரா மாநிலம் என்பது மன்னர் சத்ரபதி சிவாஜியின் மண். இந்த மண்ணில் வாக்குறுதி என்பது முக்கியமான ஒன்றாகும். வாஜ்பாய், அத்வானி, பிரமோத் மகாஜன் போன்ற பாரதிய ஜனதா தலைவர்களுடன் பணி செய்திருக்கிறோம். 

இவர்கள் அனைவரும் எந்த சமயத்திலும் வாக்குறுதிக்கு மரியாதையை அளிப்பவர்கள். இந்த சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு ஏற்கனவே முடிந்துவிட்டது. இப்போதுள்ள பாஜக வாக்குறுதிக்கு மரியாதையை அளிக்க முடியவில்லை என்றால்., சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கூட்டணியை பொறுத்த வரையில் எங்களுக்குள் எந்த விதமான பிரச்சனையில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in maharastra political problem bjp and shiv sena


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->