தேர்தலுக்கு முன்கூட்டியே மறைமுக கூட்டணி?.. ஆட்சியமைந்தும் தீராத மகாராஷ்டிரா கூட்டணி பிரச்சனை..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2019 அக்டோபர் மாதம் நடைபெற்ற மஹாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா சிவசேனா கூட்டணியானது வெற்றிபெற்றது. முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க மறுத்ததால் பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறியது.

இந்த தேர்தலில் எதிர்க் கட்சியாக தேசியவாத காங்கிரஸ் உருவெடுத்தது. ஆட்சி அமைக்க முடியாமல் குழப்பம் நீடித்தது. மக்கள் பாஜக சிவசேனா கூட்டணிக்கு தான் வாக்களித்து இருக்கின்றனர். அவர்கள்தான் ஆட்சி அமைக்க வேண்டும் தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் எதிர்கட்சி எதிர்க்கட்சியாக அமையும் என்று சரத்பவார் தெரிவித்து வந்தார். 

ஆனால், அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து, உத்தவ் தாக்கரே முதலமைச்சராக, பாஜக கூட்டணி வெளியேறி காங்கிரஸ் அமைப்புகளுடன் கூட்டணி வலுத்தது.

இந்நிலையில் இது குறித்து தேர்தல் முடிவுக்கு முன்பாகவே தேசியவாத காங்கிரஸ் உடன் சிவசேனா தொடர்பில் இருந்ததாக சஞ்சய் ராவத் எம்பி தெரிவித்து இருக்கின்றார்.

இன்று அவர் அளித்த பேட்டியில், "முன்னதாகவே சிவசேனா தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு அமைய முடிவு செய்து இருந்தது.

இந்த புதிய கூட்டணி உருவாக நான் தொடர்ச்சியாக பணியாற்றி வந்தேன்  இது சோதனைக்குழாய் குழந்தையை போன்றதல்ல. முறையாக திட்டமிட்டு பிறந்தது தான். அதற்கு பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது. 

இந்த அரசாங்கம் தன்னுடைய முதல் பிறந்த நாளைக் கொண்டாடும். இதனை கிச்சடி அரசாங்கம் என்று கூறமுடியாது. 5 ஆண்டுகளையும் இந்த அரசு பூர்த்தி செய்யும். மூன்று கட்சிகளுக்கும் இடையே வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், மூன்று தலைவர்களும் நாட்டை நேசிக்கின்றவர்கள்தான்." என்று அவர் தெரிவித்துள்ளார். 

தேர்தலுக்கு முன்பே தேசியவாத காங்கிரஸ் உடன் சிவசேனா தொடர்பில் இருந்ததா என்ற கேள்விக்கு அவர் அப்படி சொல்ல முடியும் என்று சூசகமான பதிலை கூறி இருக்கின்றார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in maharastra alliance problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->