எருதுகள் விளை நிலத்தை உழுவதற்கு பதில்., விவசாய நிலத்தை தோளில் கலப்பையை சுமந்து உழும் பெண்கள்.!  - Seithipunal
Seithipunal


இந்திய முழுவதும் தண்ணீர் பஞ்சம பிரச்சனையானது தலைவிரித்து ஆடி வருகிறது. இதனால் பல கிராமங்கள் மற்றும் நகர்ப்பகுதிகளில் வாழும் மக்கள் கடுமையான துன்பத்தை அனுபவித்து வரும் நிலையில்., பல இடங்களில் தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்தி கொண்டு வருகின்றனர்.

தற்போது மக்கள் அவதிப்பட்டு வரும் தண்ணீர் பஞ்சம் பிரச்சனையை தீர்ப்பதற்கு அந்தந்த மாநில மற்றும் மத்திய அரசின் சார்பிலும்., சமூக ஆர்வலர்களின் சார்பிலும் பலதரப்பட்ட முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது ஆலயங்களில் மழை வேண்டி சிறப்பு யாகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு., மக்கள் திரளாக கலந்துகொண்டு யாகங்களை சிறப்பித்து வருகின்றனர். 

இந்த சமயத்தில்., உத்திரபிரேதசம் மாநிலத்தில் உள்ள கோபால்பூர் கிராம பகுதியில் பெண்கள் அங்குள்ள முன்னோர்கள் கூறிய வார்த்தைக்கேற்ப மழை வேண்டி பூஜைகள் செய்து வருகின்றனர். 

அவர்களின் கூற்றுப்படி., எருதுகளால் பூட்டப்பட்டு இருக்கும் ஏர் கலப்பைகளை பெண்கள் தங்களின் தோலின் மீது வைத்து சுமந்து நிலத்தை உழுது வருகின்றனர். இவ்வாறு செய்வதால் நல்ல மழை பெய்து மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என்று நம்பிக்கை. 

இது குறித்து அவர்களிடம் கேட்ட போது., மழை பெய்து மக்கள் மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்ற காரணத்தால்., இவ்வாறு செய்து வருகிறோம். இந்த வழிபாடானது சீதா தேவியின் காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது என்று தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in madhya predesh girls praying god for rain


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->