பசியோடு 100 கிமீ நடைப்பயணம்.. மயக்க நிலையில், தக்க உதவி செய்த காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புளகாந்தகார் என்கிற இடத்தினை சார்ந்தவர் வகீல். இவரது மனைவியின் பெயர் யாஸ்மீன். உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகிறன்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார்.

இவரது மனைவியையும் உடன் அழைத்து வந்த நிலையில், தொழிற்துறை நிர்வாகத்தின் சார்பாக வீடு ஒதுக்கி வழங்கப்பட்டுள்ளது. மனைவியுடன் தங்கியிருந்த நிலையில், தற்போது 21 நாட்கள் ஊரடங்கு அமலாகியுள்ளது. இதனால் வீட்டினை விட்டு வெளியேற கூறி கணவன் - மனைவியை தொழிற்சாலை நிர்வாகம் கூறியுள்ள நிலையில், இருவரும் வெளியேறியுள்ளனர். 

8 மாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை அழைத்து கொண்டு ஊருக்கு பேருந்தில் பயணம் செய்ய துவங்கியுள்ளனர். இந்த நிலையில், பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் நடந்து செல்ல முடிவு செய்து புறப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக 100 கிலோ மீட்டர் தூரம் மீரட் பயணம் செய்த நிலையில், பணம் ஏதும் இல்லாமல் தவித்துள்ளனர். 

மேலும், சாப்பிடாமல் பசியுடன் கர்ப்பிணி பெண் தவித்த நிலையில், இருவரும் சோர்வாக மீரட் பேருந்து நிலையத்திற்கு அருகே அமர்ந்துள்ளனர். இவர்களை கண்ட உள்ளூர் மக்கள் பணம் கொடுத்து, சாப்பிடவும் தேவையான உணவுகளை வழங்கியுள்ளனர். இதனையடுத்து உள்ளூர் காவல் அதிகாரியின் உதவியுடன் அவசர ஊர்தியில் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Madhya pradesh police help pregnant girl and husband go to native


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->