இடித்து தரைமட்டமாக்கும் போது கைதட்டி ஆரவாரம்.. தீடீர் போராட்டத்தில் குதித்த மக்கள்.!! - Seithipunal
Seithipunal


கொச்சியில் கட்டப்பட்ட இந்த பிரமாண்ட மரடு குடியிருப்பில் சுமார் 343 வீடுகளை உள்ளது. இந்த மரடு குடியிருப்பு கடல் பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்டதால் அந்த கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கேரளா அரசு நேற்று இரு கட்டிடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன.

இந்தநிலையில், மரடுவில் மேலும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. நேற்று இரு கட்டிடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கட்டிடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

மரடு குடியிருப்பு இடிக்கப்படுவதால் அந்த கட்டிடத்தை சுற்றியுள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு 200 மீட்டர் தொலைவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த குடியிருப்பை தகர்ப்பதற்காக கட்டிடங்கள் முழுவதும் வெடிபொருட்களால் நிரப்பப்பட்டு மரடு அடுக்குமாடி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இந்த நிலையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள கட்டிடங்களிலும் நீர்நிலைகளிலும் அடர்த்தியான தூசு படலம் படிந்துள்ளதால் சுவாசப் பிரச்சனை மற்றும் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மேலும் மராடு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IN KOCHI BUILDING COLLAPSE PEOPLES STRIKE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->